2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மருதங்கேணி உபபொலிஸ் நிலையம் பளைப் பொலிஸின் கீழ் மாற்றம்

George   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்திற்குட்பட்டதாக இதுவரை காலமும் இயங்கி வந்த மருதங்கேணி உப பொலிஸ் நிலையம், பளைப் பொலிஸ் நிலையத்தின் கீழ், இலங்கை பொலிஸ் திணைக்கள தலைமையகத்தினால் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் கடந்த ஜுலை மாதம் தொடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் பளைப் பொலிஸ் நிலையத்தின் கீழ் இருந்த மருதங்கேணி உபபொலிஸ் நிலையம், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, மருதங்கேணிப் பிரதேசத்தின் நீதிமன்ற எல்லையும் பருத்தித்துறை நீதிமன்றமாகக் காணப்பட்டது. இந்நிலையில், தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளமையினால் மருதங்கேணி உபபொலிஸ் நிலையத்திற்கு கீழ்வரும் பிரதேசங்களின் சிவில் நடவடிக்கைகள் பளைப் பொலிஸாரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மருதங்கேணிப் உபபொலிஸ் நிலையத்திற்கு கீழிருந்த, செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, பத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, நித்தியவெட்டை, கெவில் ஆகிய பிரதேசங்களின் பொலிஸ் நடவடிக்கைகள் இனிவருங்காலங்களில் பளைப் பொலிஸிற்கு உட்பட்டதாக அமையவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்டதாகவும் நடைபெறவுள்ளன.

யுத்தத்தின் பின்னர், பளைப் பொலிஸ் நிலையத்தின் கீழ், கிளாலி, எழுதுமட்டுவாள், முகமாலை, பளை, புலோபளை, புதுக்காடு, இயக்கச்சி, ஆனையிறவு ஆகிய பிரதேசங்கள் காணப்பட்டன.

அவற்றுடன், மருதங்கேணி உபபொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மேற்படி இடங்களும் இணைக்கின்றதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் மருதங்கேணிப் பிரதேசத்திலிருந்து கிளிநொச்சிக்குப் போக்குவரத்து வசதிகள் காணப்பட்டதாகவும், ஆனால் தற்போது போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் நீதிமன்ற அலுவல்களை மேற்கொள்வதில் சிரமங்களுக்கு முகங்கொடுக்க Nவுண்டிய நிலையேற்பட்டுள்ளதாக மருதங்கேணிப் உபபொலிஸ் பிரிவினைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .