2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் காயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான், செல்வநாயகம் கபிலன்

யாழ். மீசாலைச் சந்திக்கருகில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிளொன்று கடைச் சுவருடன் செவ்வாய்க்கிழமை (05) இரவு மோதியதில் உடுவில் வடக்கினைச் சேர்ந்த கருணானந்தன் தனுப்பிரகாஸ் (வயது 25) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் புதன்கிழமை (06) தெரிவித்தனர்.

கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரிக்குச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே இரவு 11.45 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து சுவர் மீது மோதியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .