2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட முற்பட்டவர் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்செழுப் பகுதியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இன்று வியாழக்கிழமை (07) பகல் திருடுவதற்கு முயற்சித்த, பொம்மவெளிப் பகுதியைச் சேர்ந்த 24 வயது சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறுகையில்,

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரும் மனைவியும் வெளியிடத்துக்குச் சென்றிருந்த வேளை, அவர்களது மகள் வீட்டில் தனியே இருந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி சந்தேகநபர் வீட்டின் கூரை ஓடு வழியாக உள்நுழைய முயற்சித்த வேளையில், தடுமாறிக் கீழே வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, வீட்டிலிருந்த மகள் கூக்குரலிடவே அங்கு கூடிய பொதுமக்கள், சந்தேகநபரைப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .