2025 ஜூலை 09, புதன்கிழமை

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் ஆளணி பற்றாக்குறை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் வரி அறவீட்டாளர் உள்ளிட்ட 37 உத்தியோகத்தர்களுக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாக  மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் அம்பலவாணன் தனிநாயகம் வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரதேச சபையில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் 5 பேரும், முகாமைத்துவ உதவியாளர்கள் இருவரும், சுகாதார சேவையாளர்கள் இருவரும், வரி அறவீட்டாளர்கள் இருவரும், சாரதிகள் மூவரும், அலுவலக உத்தியோகஸ்தர்கள் இருவரும், காவலாளி ஒருவரும், ஆயுள்வேத மருத்துவர் ஒருவரும், மின் இணைப்பாளர் ஒருவரும், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் இருவரும், ஆயுள்வேத மருந்தாளர் ஒருவரும், முறைசார ஊழியர்கள் 15 பேரும் தேவையாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வரி அறவீட்டாளர்கள் இல்லாமையால் பிரதேச சபைக்கு போதிய வருமானம் ஈட்ட முடிவதில்லை என்பதுடன், இதனால் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்க முடியவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .