2025 ஜூலை 09, புதன்கிழமை

விவசாயிகள் விதை நெல்லை விற்பனை செய்கின்றனர் : விவசாயிகள் சம்மேளனம்

George   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் காலபோக நெற்செய்கைக்கு விதை நெல்லைப் பெறும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நெல் உற்பத்தியை வெளிமாவட்ட நிறுவனங்களுக்கு கிளிநொச்சி விவசாயிகள் விற்பனை செய்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனம் வியாழக்கிழமை (21) குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சம்மேளனம் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோகச் செய்கையில் 59 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் ஏக்கர்களில் நெற்செய்கை பயிரிடப்படும்.

அந்தவகையில், எதிர்வரும் காலபோகத்திற்கு விதை நெல்லைப் பெறும் பொருட்டு, இரணைமடுக்குளத்திலிருந்த நீரின் அளவைக் கொண்டு 450 ஏக்கர் நிலப்பரப்பில் கிளிநொச்சியில் சிறுபோகச் செய்கை செய்கை பண்ணப்பட்டது.

சிறுபோகச் செய்கையின் அறுவடை தற்போது இடம்பெறும் நிலையில், அவற்றை அறுவடை வயல்களில் வைத்து வெளிமாவட்ட நிறுவனங்கள் கொள்வனவு செய்வதாலும், அதற்கிணங்க விவசாயிகள் அதனை விற்பனை செய்வதாலும், எதிர்வரும் காலபோகத்திற்கான விதை நெல்லுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்தது.

450 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல்லைக் கொண்டு 24 ஆயிரம் தொடக்கம் 25 ஆயிரம் ஏக்கர் நெற் செய்கையை மேற்கொள்ள முடியும் என்ற நிலையிருந்தது. இந்நிலையில் தற்போது, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லையும் விற்பனை செய்வதால், பெருமளவு விதை நெல்லை காலபோகத்தில் கொள்வனவு செய்யவேண்டிய தேவையேற்படும் என சம்மேளனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .