2025 ஜூலை 09, புதன்கிழமை

முகப்பூச்சு கொள்வனவு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

George   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்திலுள்ள மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் தாங்கள் கொள்வனவு செய்து, விற்பனை செய்யும் முகப்பூச்சுக்களை உரிய முகவர்களிடம் பெற்று விற்பனை செய்யவேண்டும் என யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அதிகார சபையினர் வியாழக்கிழமை (21) தெரிவித்தனர்.

அவ்வாறு உரிய முகவர்கள் ஊடாக கொள்வனவு செய்யாத வியாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையினர் கூறியுள்ளனர்.

வியாபாரிகள் உரிய முகவர்கள் ஊடாக முகப்பூச்சுக்களைக் கொள்வனவு செய்து, அவை தரமானவையாக இல்லாதுவிடின், அந்த முகவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். 

ஆனால், அனுமதி பெறாதவர்களிடம் இருந்து வியாபாரிகள் முகப்பூச்சுக்களைக் கொள்வனவு செய்து அவை தரமற்றவையாக இருந்தால், அந்த முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மாறாக கொள்வனவு செய்த வியாபாரிகள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஆகவே, தங்களையும் தங்கள் வாடிக்கையாளர்களையும் பாதிக்காத வகையில் வியாபாரிகள் உரிய முகவர்களிடம் முகப்பூச்சுக்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் என சபையினர் மேலும் கேட்;டுக்கொண்டனர். 

யாழ். மாவட்டத்தில் அண்மையில் தரமற்ற முகப்பூச்சுக்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பில் 2 விநியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய விநியோகிக்கப்பட்ட முகப்பூச்சுக்கள் மீளப்பெற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .