2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆபாசப்படம் காண்பித்த ஆசிரியருக்கு அரச நிதி கட்ட உத்தரவு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

ஆபாசப் படங்களை வைத்திருந்து அதனை மாணவர்களுக்குக் காண்பித்த ஆசிரியரை அரச நிதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் கட்டுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மேற்படி ஆசிரியர், கொடிகாமம் நகர்ப் பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கின்றார்.

இந்நிலையில், மேற்படி ஆசிரியர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, தொலைபேசியில் வைத்திருந்த ஆபாசப்படங்களைக் காண்பித்து வந்துள்ளார்.

இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்படி ஆசிரியரை வியாழக்கிழமை (21) மாலை பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து ஆசிரியரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) ஆஜர்படுத்திய போது, கடுமையாக எச்சரிக்கை செய்த நீதவான்,  ரூபாய் ஒரு இலட்சத்தை அரச நிதியாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .