2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஒஸ்மானியா கல்லூரிக்கு புதிய கட்டடங்கள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


யாழ்ப்பாணம், முஸ்லீம் தெருவில் அமைந்துள்ள ஒஸ்மானியா கல்லூரிக்கு 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளதாக கல்லூரி அதிபர் எம்.எஸ்.ஏ.எம்.முபாரக் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.

யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியில் விஞ்ஞான ஆய்வுகூடம், கணினி அறை மற்றும் வகுப்பறைகள் உள்ளடங்கலாக 2 மாடிகளைக் கொண்டதாக இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய கட்டிடத் தொகுதி அமைப்பதற்காக, அவ்விடத்திலுள்ள பழைய கட்டடத்தை அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (24) முதல் ஆரம்பமாகியுள்ள அதேவேளை, புதிய கட்டடத் தொகுதி அமைக்கும் பணிகள் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் 11 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து அமைக்கப்பட்டு வரும் இரண்டு மாடிக் கட்டடத் தொகுதியின் கட்டடப் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாக அதிபர் குறிப்பிட்டார்.

இந்தக் கட்டடத் தொகுதியில் வகுப்பறைகளும் மற்றும் ஒன்றுகூடல் மண்டபமும் அமையப் பெற்றுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .