2025 ஜூலை 09, புதன்கிழமை

வீதி விளக்குகள், குடிநீர் விநியோகத்திற்கு முன்னுரிமை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்., சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி மின்விளக்குகள் பொருத்துதல் மற்றும் குடிநீர் விநியோகத்திற்கு அடுத்த வருட (2015) வரவு – செலவுத்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்படவுள்ளதாக நகரசபை தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குடிநீருக்கு பற்றாக்குறை காணப்படும் பிரதேசங்களில் பொதுக்கிணறுகள் அமைக்கவும், குழாய் மூலம் குடிநீர் வழங்கவும் நிதி ஒதுக்கப்படும்.

அத்துடன், மின்விளக்குகள் பொருத்துவதற்காக 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில், இவ்வருடம் 633 மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 458 மின்விளக்குகள் பிரதேச சபையாலும், 175 மின்விளக்குகள் பொதுமக்களின் பங்களிப்பாலும் பொருத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .