2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், நெல்லியடி, அத்தாய் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் அ.க.நடராசா நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உத்தரவிட்டார். 

குறித்த பகுதியைச் சேர்ந்த இருவர் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அத்தாய் பகுதியைச் சேர்ந்த எஸ்.சசிகரன் (வயது 28) மற்றும் மாலுசந்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றும் குமாரசாமி தீபராஜ் (வயது 36) ஆகியோர் மீது, கடந்த 18ஆம் திகதி, குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

இதில் படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த நெல்லியடி பொலிஸார், அத்தாய் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்தனர்.

தொடர்ந்து, மேற்படி சந்தேகநபர் பருத்தித்துறை பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்தே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .