2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேர் முட்டியில் மது அருந்தியவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கரணவாய் பகுதியிலுள்ள ஆலயமொன்றின் தேர் முட்டிக்கு மேல் வைத்து மதுபானம் அருந்திய மூவரை, நெல்லியடி பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கைது செய்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 26, 27 மற்றும் 30 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து நல்லூர் தேர் உற்சவத்திற்காக யாழ்ப்பாணம் சென்ற இவர்கள், மேற்படி பகுதியிலுள்ள ஆலயமொன்றின் தேர் முட்டியில் வைத்து மதுபானம் அருந்தியுள்ளனர்.

இதனை அவதானித்த ஆலய பரிபாலன சபையினர், இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார், அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .