2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பேஸ்புக்கில் அவதூறு: இருவருக்குப் பிணை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

ஜேர்மனில் வசிக்கும் இளைஞன் ஒருவர் ஊர்காவற்றுறை கரம்பன் கிராமத்தைப் பற்றி தனது முகப்புத்தகத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்தமையால், யாழ்ப்பாணத்திலுள்ள அவரது சகோதரன் மீது தாக்குதல் நடத்திய இருவரை தலா 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல ஊர்;காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (27) உத்தரவிட்டார்.

அத்துடன், இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும் செப்டெம்;பர் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது முகப்புத்தகப் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார்
என்றுகூறி கரம்பனில் வசிக்கும் அவ்விளைஞனின் சகோதரன் மீது திங்கட்கிழமை (25) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 26 வயது இளைஞன், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுபின் வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அதேயிடத்தைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (26) மதியம் கைதுசெய்தனர்.

தொடர்ந்து மேற்படி இரு சந்தேகநபர்களும் புதன்கிழமை (27) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .