2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆனையிறவு உப்பள புனரமைப்பு தொடர்பில் ஆராய்வு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனையிறவு உப்பளத்தின் புனரமைப்பு மற்றும் உட்கட்டுமானப் பணிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தறிந்து கொண்டார்.

கொழும்பு, மருதானையிலுள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் (29) இடம்பெற்றது.

இதன்போது, ஆனையிறவு உப்பளத்தை மீளவும் இயங்க வைக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் உட்கட்டுமானப் பணிகளில் முக்கியமாக வீதி, குடிநீர் விநியோகம், மின்சாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கான திட்டங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக வகுக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் உட்கட்டுமானப் பணிகள் தொழிற்துறை நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்து அமைச்சர்இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன், இதுவரை செய்து முடிக்கப்பட்ட புனரமைப்பு வேலைகள், செய்யப்பட வேண்டிய வேலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உற்பத்திகள் முன்னெடுக்கப்படும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, அங்குள்ள உப்பு வயல்களைப் புனரமைப்புச் செய்வது மற்றும் புதிதாக நிர்மாணிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஆனையிறவு உப்பளத்தின் மீள்புனரமைப்புப் பணிகளுக்காகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

யுத்தம் காரணமாக செயலிழந்துபோன ஆனையிறவு உப்பளம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மீளவும் இயங்கவுள்ளது. அவ்வாறு இயங்கும் பட்சத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் பணிப்பாளர் அஜித் ஏக்கநாயக்க, பொறியியலாளர் பவானந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .