2025 ஜூலை 09, புதன்கிழமை

குழை போட்டு மீன்பிடித்தவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


பருத்தித்துறை முனைக் கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையான குழை போட்டு கணவாய் பிடித்தலில் ஈடுபட்ட மூவருக்குத் தலா 16 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஐநிதிபாலன் வெள்ளிக்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

மேற்படி பகுதியில் குழைபோட்டு மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேரை கடற்படையினரும், முனை மீனவர் சங்கமும் இணைந்து கைது செய்ய முற்பட்டனர். இதன்போது நால்வர் மாத்திரதே கைது செய்யப்பட்டதுடன் ஏனைய மூவரும் தப்பித்து ஓடியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஜூலை 22ஆம் திகதி ஆஜர்ப்படுத்திய வேளையில், நால்வருக்கும் தலா 1000 ரூபா தண்டம் விதித்து நீதவான் தீர்ப்பளித்திருந்தார்.

தொடர்ந்து, தப்பித்து ஓடிய பிரதான குற்றவாளிகளான மூவரும் வௌ;வேறு திகதிகளில் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (29) மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, நீதவான் மேற்படி நபர்களுக்குத் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .