2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பற்றிக் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ்., வடமராட்சி, தும்பளைத் தெற்குப் பகுதியில் வடமாகாண வர்த்தக வாணிப அமைச்சின் 1.8 மில்லியன் ரூபாய் செலவில் தும்பளை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் அமைக்கப்படவுள்ள பற்றிக் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடிக்கல் நாட்டினார்.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சால் கிராமஅபிவிருத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 46 மில்லியன் ரூபாய் நிதியில், 2 மில்லியன் ரூபாய் வடமராட்சிக்கு ஒதுக்கப்பட்டே இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுகின்றது.

இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்ட பின்னர், தும்பளை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தும் நிலையமாகவும் இது இருக்கும் என வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .