2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலா சென்றவர்கள் வீட்டில் திருட்டு

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை ரவர்ச் சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்த 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மடிக்கணினி ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தனர்.

மேற்படி வீட்டில் இருந்தவர்கள் மூன்று நாள் சுற்றுலா மேற்கொண்டு கண்டிக்குச் சென்றிருந்த வேளையில் இந்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா முடித்து சனிக்கிழமை (30) வீட்டிற்குத் திரும்பிய வேளையில் வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்ததுடன், வீட்டிலிருந்த பொருட்களைச் சோதனை செய்து பார்த்தபோது, அங்கிருந்த மடிக்கணினி திருட்டுப் போயிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து, வீட்டு உரிமையாளர்கள்; சனிக்கிழமை (30) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .