2025 ஜூலை 12, சனிக்கிழமை

நோயாளர் சிகிச்சை அட்டையை பறித்தவர் கைது

George   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பெண்ணொருவர் வைத்திருந்த நோய் சிகிச்சை அட்டையை பறித்து சென்ற 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை செல்வ சந்நிதி ஆலயத்தில் வைத்து திங்கட்கிழமை(08) கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறுகையில்,

தென்பகுதி நெளுங்கமுவ என்ற பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர், தனது மகனுக்கு இதய சிகிச்சை செய்வதற்காக செல்வ சந்நிதி ஆலயத்தில், நோயாளர் சிகிச்சை அட்டையை காண்பித்து பணம் சேகரித்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (08) மாலை பெண்ணின் கையில் இருந்த நோயாளர் சிகிச்சை அட்டையை இளைஞர் ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.

இது தொடர்பாக பெண் அங்கிருந்த பொலிஸாரிற்கு முறையிட்டதையடுத்து, நயினாதீவு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .