2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பஸ் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி

Thipaan   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன்


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், புத்தூர் வீதியில், இன்று (08) இரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மேலும் 20 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தில் மானிப்பாய் கட்டுடையை சேர்ந்த என். சதீஸன் (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வளைவு ஒன்றில் திரும்பும் போது, பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .