2025 ஜூலை 12, சனிக்கிழமை

றெக்ஷிசனின் மனைவி பிணையில் விடுதலை

George   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் றெக்ஷிசனின் மனைவி அனிற்றாவுக்கு அவரது உறவினர் ஒருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(09) பிணை வழங்கியதையடுத்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல்றெக்ஷிசன் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் றெக்ஷிசனின் மனைவி ஆகியோருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பிணை வழங்கினார்.

தொடர்ந்து, மேற்படி வழக்கு கடந்த 2ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருவரையும் பிணையில் எடுப்பதற்கு எவரும் முன் வரவில்லை.

இதனையடுத்து, இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அனிற்றாவை, அவரது உறவினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை(09) பிணையில் எடுத்துள்ளார். இருந்தும், கமலேந்திரனை பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. 

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர்3 ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். 

அத்துடன் றெக்ஷஷிசனின் மனைவி அனிற்றா மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். 

மற்றய இளைஞனுக்கு பிணை மனுக்கோரிய வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமையால் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .