2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பெண்களின் அங்கங்களை படம்பிடித்த சாரதி கைது

George   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்

யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் வாகன சாரதி, பெண்களை அநாகரீகமான முறையில் தனது அலைபேசியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை(09) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நின்று, அங்கு நின்றிருந்த பெண்களின் அங்கங்களை தனது அலைபேசியில் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள், சந்தேகநபரை பிடித்து பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள உபபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, சந்தேகநபர், யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்த போது, சந்தேகநபரது அலைபேசியில் பெண்களின் அங்கங்களின் புகைப்படங்கள் பல இருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து, சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

மேற்படி சந்தேகநபர் கடந்த ஜூலை மாதம் மாநகர ஆணையாளருடைய வாகனத்தை மதுபோதையில் செலுத்தி சென்று, அராலி சந்தியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .