2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதிக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், புத்தூர் வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகிய பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து லிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ், திங்கட்கிழமை (09), இரவு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் மானிப்பாய், கட்டுடையைச் சேர்ந்த என்.சதீஷன் (வயது 24) என்ற இளைஞர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார், பஸ் சாரதியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, விபத்துக்குள்ளான பஸ்ஸுக்கு, யாழ் – கொழும்புக்கான வழித்தட அனுமதியில்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பஸ் சாரதி மல்லாகம் மேலதிக நீதவான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (09) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .