2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மக்கள் துன்புறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது: அனந்தி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, எம்.றொசாந்த்

வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிட்டாலும் மக்கள் துன்புறுத்தப்படுவது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென  வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் புதன்கிழமை (10) இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அண்மையில் நவக்கிரி சரஸ்வதி வீதியில் டிப்பர் வாகனம் மோதியதில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தை தொடர்ந்து மக்கள் கோபத்தில் அந்த டிப்பர் வாகனத்தை எரித்தனர். பொலிஸார் அத்தருணத்தில் தடயங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும், டிப்பர் வாகனத்தை எரித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை உடனடியாக பொலிஸார் செய்யவில்லை.  டிப்பர் வாகனம் அரசியற் கட்சியொன்றுக்கு சொந்தமானது. ஆகையால், அந்த கட்சி பின்புலத்தின் அடிப்படையில் அப்பாவி இளைஞர்கள் உட்பட 13 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இது அனைத்தும் கட்சி பின்புலத்தின் அடிப்படையில் இடம்பெற்றதாகும்.

மேலும், அண்மையில் வட்டுக்கோட்டை பகுதியில் மரக்குற்றிகளுடன் சென்றடிப்பர் வாகனம் குடும்பஸ்தர் ஒருவரை மோதி, குடும்பஸ்தரை படுகாயமடைய செய்தது. 

டிப்பர் வாகனத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது மரக்குற்றிகள் இல்லாத நிலையில் பொலிஸார் ஆஜர்ப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக விசாரித்ததில், மரக்குற்றிகள் அனுமதிப்பத்திரமின்றி ஏற்றி செல்லப்பட்டமை தெரியவந்ததுடன், அதனை பொலிஸார் மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்தது.

இதுபோன்ற பொலிஸாரின் செயற்பாடுகள் ஆச்சரியத்திற்குரியவை. பொலிஸார், மக்களுக்காக பணியாற்ற வேண்டும். மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிட்டாலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .