2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆபத்து...

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு முள்ளிவாய்கால் உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்தை பொருட்படுத்தாமல் பெண்களும்இ சிறுவர்களும் இரும்பு பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடிபொருட்கள் அபாயம் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அபாயம் என அறிவித்தல் வைக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் அதனை அலட்சியம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது,

வெடிபொருட்கள் அபாயம் உள்ள பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெடிபொருட்களின் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மாவட்ட செயலகம் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருந்தும், பொதுமக்கள் அதனை அலட்சியம் செய்து ஆபத்து மிகுதி இடங்களுக்கு சென்று அங்குள்ள கைவிடப்பட்ட வாகனங்களின் இரும்புகளை பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனக்கூறினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .