2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆங்கிலம் சித்தியடைந்த இராணுவ அதிகாரிகள்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன்


யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 3 மாதகால ஆங்கில பயிற்சி நெறியில் சித்தியடைந்த 31 இராணுவ வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, பலாலி படைத்தலைமையகத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட படைகளின் கட்டளை தனபதி மேஜர் ஜெனரல் உதயபெரேராவின் வழிகாட்டலில்  ஜூன் மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையில் இந்த ஆங்கில பயிற்சிநெறி நடைபெற்றது.

இந்த பயிற்சியில். ஆங்கில நாளிதழ்கள்களை படித்தல், ஆங்கில தொகைக்காட்சி அலைவரிசைகளை பார்த்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில், கட்டளை தளபதி, இலங்கை இராணுவ பொலிஸ் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நந்நதன உடவத்த, இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .