2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் யாழில் இல்லை: த.கோடீஸ்வரன்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், பொ.சோபிகா

வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்று வடமாகாணத்தில் வவுனியாவில் மட்டுமே இயங்குவதாகவும் வடமாகாணத்தின் வேறு மாவட்டங்களில் இல்லையெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடமாகாண பணிப்பாளர் தம்பிராசா கோடீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணத்தில் தற்போது இயங்குகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் எதுவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்ல. வடமாகாணத்தில் வவுனியாவில் மட்டும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் இயங்குகின்றது.  ஆகையால், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் ஊடாக வெளிநாடு செல்வதற்கு முயற்சித்து ஏமாற்றங்கள் அடைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அங்கீகரிக்கப்படாமல் வடமாகாணத்தில் இயங்கி வருகின்ற வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

அத்துடன், மாணவர் விசாவில் வெளிநாடு சென்று கல்வி கற்பதற்கு வசதிகள் ஏற்படுத்துவதாக கூறும் யாழில் இருக்கும் நிறுவனங்களும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், வடமாகாணத்தில் தொழில் சந்தையொன்றை எதிர்வரும் மாதம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தவுள்ளதாகவும் அந்த சந்தைக்கு 15இற்கும் மேற்பட்ட அங்கீரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களை அழைத்து வரவுள்ளதாகவும் கூறினார். இந்நிகழ்வுக்கு இந்தியாவின் தென்னிந்திய பாடகர் உன்னி கிருஸ்ணனையும் அழைத்து வரவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .