2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'மக்கள் வழிபடுவதை பொலிஸார் தடுக்கவில்லை'

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா

பொதுமக்கள் வழிபாடு நடத்தும் நிகழ்வுகள் எதனையும் தடுக்க வேண்டும் என்ற தேவையோ அவசியமோ பொலிஸாருக்கு இல்லையென யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

மாத தொடக்கத்திற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது. இதன்போது, “கடந்த வாரம் மருதனார்மடம் சபாபதிபிள்ளை நலன்புரி முகாமில் நடைபெறவிருந்த கூட்டுப்பிரார்த்தனை குழப்பப்பட்டது.

அதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருந்ததாக மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் அவ்வாறு செய்தார்களா” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமய நடவடிக்கைகளை பொலிஸார் குழப்பமாட்டார்கள். குறிப்பிட்ட முகாமில் நடைபெறவிருந்த கூட்டுப் பிரார்த்தனையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்த வேண்டாம் என தடுப்பதாக சுன்னாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பிரகாரம் இரண்டு பொலிஸார் சிவில் உடையில் முகாமுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். ஆனால். அவர்கள் சென்ற வேளையில் குறிப்பிட்ட இடத்தில் எவரும் காணப்படவில்லை.

அத்துடன், இது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் செய்யாமையால் மேற்கொண்டு பொலிஸாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .