2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு காய்ச்சல்; கலைப்பீடம், நாளை மூடப்படும்

George   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மாணவர்கள் இருவருக்கு டெங்கு தொற்றியிருப்பது இனங்காணப்பட்டதையடுத்து யாழ். பல்கலைக்கழக கலைப்பீடம் நாளை திங்கட்கிழமை(15) மூடப்படும் என கலைப்பீட பீடாதிபதி, இன்று ஞாயிற்றுக்கிழமை(14) அறிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களே இவ்வாறு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கலைப்பீட விரிவுரைகளை நாளை திங்கட்கிழமை (15) நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகளை மாத்திரம் தற்போது நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .