2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காணாமற்போனவர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், யோ.வித்தியா

யாழ்ப்பாணம், மாதகல், திருவடிநிலை பகுதி கடலில் வியாழக்கிழமை (18) குளிக்க சென்று காணாமற்போன இளைஞன் வெள்ளிக்கிழமை (19) காலை சடலமாக மீட்கப்பட்டதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சுழிபுரம் நெல்லையடி பகுதியை சேர்ந்த ஜெயகுருந்தன் சுரேஸ் (வயது 19) என்பவரே சடலமாக கரையொதுங்கினார். மேற்படி நபரும் அவரது நண்பரும் வியாழக்கிழமை (18) மதியம் திருவடிநிலை கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

இதன்போது, இருவரையும் சுழி இழுத்து சென்றுள்ளது. நீச்சல் தெரிந்த நண்பர் நீந்;தி கரைசேர்ந்து, தனது நண்பர் காணாமற்போன விடயத்தை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வட்டுக்கோட்டை பொலிஸார் இது தொடர்பில் இளவாலை பொலிஸாரிற்கு தெரியப்படுத்தி தேடுதல் நடவடிக்கை வியாழக்கிழமை (18) மாலை முதல் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும், காணாமற்போனவர் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் காணாமற்போனவர் வெள்ளிக்கிழமை (19) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .