2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாள் வெட்டு : சந்தேக நபர்கள் அறுவருக்கு பிணை

Kanagaraj   / 2015 மார்ச் 28 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் நீதிமன்ற வளாகத்துள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கைதான சந்தேக நபர்கள் 06 பேரையும் தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையுடன் கூடிய 25 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் நீதிமன்ற  நீதவான் (27) அனுமதியளித்ததாக தெல்லிப்பளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தனர்.


அத்துடன் சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் பிரதி ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை தோறும் தத்தமது கிராமசேவையாளர் பிரிவுக்கு சென்று கையொப்பம் இடுமாறு பணித்தார்.


கடந்த தை மாதம் 13 ஆம் திகதி மானிப்பாய் பகுதியில் இரு குழுக்களுக்கு ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியிருந்தது.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்தது.


இந் நிலையில் வழக்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வந்த இருவரை நீதிமன்றிற்கு வெளியில் சந்தேக நபர்கள் வாளாள் வெட்டியிருந்தனர்.


இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பளை பொலிஸார், வாள் வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஆறு பேரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X