2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'யாழ். மாவட்டத்திலிருந்து 400பேர் பொலிஸில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்'

Thipaan   / 2015 மார்ச் 28 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ் மாவட்டத்தில் 200 இளைஞர்களையும் 200 யுவதிகளையும் பொலிஸில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து சனிக்கிழமை (28) கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் பாதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. பொலிஸார் பாராமுகமாக உள்ளனர் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதற்கு உங்களுடைய பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். விரைவில் யாழ். மாவட்டத்தில் 200 இளைஞர்களையும் 200 யுவதிகளையும் பொலிஸில் இணைத்துக் கொள்ளவுள்ளோம்.

இங்குள்ள இளைஞர், யுவதிகள் பொலிஸில் இணைய நீங்கள் வழி செய்ய வேண்டும். இதன் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கலாம் என பிரதமர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X