2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முப்படைகளையும் பிரதமர் சந்தித்தார்

George   / 2015 மார்ச் 29 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வடக்குக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் வீரர்களையும் சனிக்கிழமை (28) அவர்களின் தலைமை அலுவலகங்களில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பலாலியில் உள்ள இராணுவ படைதலைமையகத்துக்கு விஜயம் செய்து இராணுவத்தினருடன் கலந்துரையாடினார். 

பின்னர் பலாலியிலுள்ள விமானப்படை தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டு விமானப்படையினருடன் கலந்துரையாடிய பின்னர் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டு கடற்படையினரை சந்தித்தார்.

இதன்போது, பலாலியில் முப்படைகள் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றும்போது, ஆங்கிலம் மற்றும் கணிணி அறிவை முப்படைகளும், பொலிஸாரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் தொழிநுட்பத்துக்கு ஏற்றவாறு முப்படையினரும் பொலிஸாரும் தமது கணிணி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கில மொழித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அவற்றை வளர்த்துக்கொள்வதன் மூலமே நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்யமுடியும்.

விடுதலைப்புலிகளின் மீதான தடை நீடித்தமைக்கு நன்றி 

விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் முன்னர் நீக்கியிருந்தது. அது தவறான விடயம். இது தொடர்பில் எமது அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெரியப்படுத்தியது. இதனையடுத்து விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. அதற்கு நன்றிகள் தெரிவிக்கின்றோம். 

நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த முப்படையினரையும் பாராட்டுகின்றேன் என்று ரணில் விக்ரமசிஙக மேலம் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X