2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாணத்துக்கு புதிதாக 160 தாதியர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்காக 160 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை திங்கட்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.

நியமனம் பெறுபவர்கள், வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் தேவைக்கு ஏற்றவாறு பணிக்கு அமர்த்தப்படுவர்.

வடமாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்படி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

நியமனம் பெறும் தாதியர்கள், தேவையின் அடிப்படையில் முன்னுரிமையளிக்கப்பட்டு, வைத்தியசாலைகளில் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X