2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு பரவ இடமளித்தோருக்கு எதிராக வழக்கு

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுச்சுகாதார பரிசோதகருடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாழ். மாநகர சபை எல்லைக்குள் செய்யப்பட்டது.

இதன்போது, டெங்கு பரவுக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வர் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X