2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாநகரசபை சாரதிகள் போராட்டம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 30 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மாநகர சபையின் சாரதிகள், இன்று திங்கட்கிழமை (30) பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

65 சாரதிகளுடைய ஓய்வு அறையை விஸ்தரித்தல், புனரமைத்தல், கடமையாற்றும் போது உணவு, உடைகள், வைத்து எடுப்பதற்கு பெட்டகங்கள் அமைத்தல், சாரதிகளுக்கான மலசலகூடம் அமைத்தல், சேவைமூப்பு அடிப்படையிலுள்ள சாரதிகளுக்கு வாகனங்கள் வழங்கல், சாரதிகளாக 15 தொடக்கம் 25 வருடங்கள் கடமையாற்றி நோய்வாய்ப்பட்டர்களுக்கு அவர்களுக்குரிய வேலைகளை வழங்கல், நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாமல் 5 தொடக்கம் 6 வருடங்களாக கடமையாற்றும் பதில் சாரதிகளுக்கு அமையத் தொழிலாளர் நியமனங்கள் வழங்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மாநகர சபை அதிகாரிகள் எவரும் தங்களை மதிப்பதில்லை எனவும் தங்களின் வாகனங்களின் சாரதி இருக்கைகள் மோசமாக சேதமடைந்திருந்தும் அவற்றைத் திருத்தித் தரவில்லை எனவும் தெரிவித்த போராட்டக்காரர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X