2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

போக்குவரத்து சபை பஸ் மோதி ஒருவர் பலி

George   / 2015 மார்ச் 30 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புப் பிள்ளையார் ஆலயத்துக்கருகில் திங்கட்கிழமை (30) காலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கராயன் கண்ணகிபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை தயாளன் (வயது 31) என்பவரே இந்நத விபத்தில் உயிரிழந்தார். 

முட்கொம்பனில் இருந்து கிளிநொச்சிக்கு சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரை மோதியுள்ளது. 

அதனையடுத்து படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவரை, முதலில் அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். 

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து இடம்பெற்றதையடுத்து, பஸ்  சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் ஒளிந்துகொண்டனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X