2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வேலணையில் 7 கடைகள் உடைத்து திருட்டு

Menaka Mookandi   / 2015 மார்ச் 30 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வேலணைச் சந்தியிலிலுள்ள 7 கடைகள் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

பலசரக்கு, உணவகம், தொலைத்தொடர்பு, மரக்கறி ஆகிய விற்பனை செய்யும் கடைகளே இவ்வாறு உடைக்கப்பட்டு, அங்கிருந்த அத்தியாவசியமான பொருட்களும், தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து 3,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி கணக்கிடப்படவில்லையெனவும், உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X