2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பண மோசடி செய்தவரின் கடவுச்சீட்டு முடக்கம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 30 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி நகரப்பகுதியிருள்ள வர்த்தகர் ஒருவரிடம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாது மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு தயாராகவிருந்த சந்தேகநபரின் கடவுச்சீட்டை இடைநிறுத்தி வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற மாணிக்கவாசகர் கணேசராஜா திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நெல்லியடி பொலிஸார், குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

சந்தேகநபர் கடந்த 2013ஆம் ஆண்டு வர்த்தகரிடமிருந்து 5 இலட்சம் ரூபாய் காசை கடனாகப் பெற்றிருந்தார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு காசோலைகளை வர்த்தகருக்கு வழங்கியுள்ளார். வழங்கப்பட்ட காசோலைக்குரிய பணம் வங்கியில் இல்லையென வங்கியால் காசோலை திருப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட வர்த்தகர் கடந்த 12ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, சந்தேகநபர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காக திட்டத்தை தீட்டியமை தெரியவந்தது. சந்தேகநபரின் கடவுச்சீட்டை இடைநிறுத்தி வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கும் மனுவை பொலிஸார் திங்கட்கிழமை (30) நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் கட்டளையை பிறப்பித்து உத்தரவிட்டார்.

இன்றையதினம் (30) காசோலை மோசடியில் ஈடுபட்டவர் வெளிநாடு செல்வதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கபெற்றிருந்தது. இதனையடுத்து, நெல்லியடி பொலிஸாரால், சந்தேக நபரின் கடவுச்சீட்டினை இடை நிறுத்தி வைப்பதற்கான கட்டளையினை மன்றில் சமர்பித்திருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X