2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புகையிரதக் கடவைகளின் எண்ணிக்கை குறைப்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

1990 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் இருந்த புகையிரதக் கடவைகளைவிட தற்போது அமைக்கப்பட்டுள்ள புகையிரதக் கடவைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தனக்குக் கூறியதாக யாழ் மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் எஸ். ஜெயசேகரம் தெரிவித்தார்.

யாழ். வணிகர் கழகத்தில் புதன்கிழமை (22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

'1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் 105 புகையிரதக் கடவைகள் காணப்பட்டன. தற்போது 70 புகையிரதக் கடவைகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் புதிய புகையிரதக் கடவைகளை அமைக்க முடியாது என பொது முகாமையாளர் என்னிடம் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் புகையிரதக் கடவைகளில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக கடவைகளில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவரிடம் கோரினேன்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகம், புகையிரதத் தினைக்களம் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு ஆகியன இணைந்து புகையிரத கடவை பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ளவுள்ளனர்.

பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சிப் படங்களை காண்பித்து விழிப்புணர்வு நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

தென்மராட்சியில் வலயத்தில் 3 பாடசாலைகளிலும் யாழ்ப்பாண வலயத்தில் 8 பாடசாலைகளிலும் வலிகாமம் வலயத்தில் 6 பாடசாலைகளிலும் முதற்கட்டமாக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்படும். தொடர்ந்து ஏனைய பாடசாலைகளுக்கும் நடைபெறும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .