2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காணி வாங்கி தருவதாகக்கூறி மோசடி: வயோதிபர் மீது பெண் புகார்

George   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காணி வாங்கித்தருவதாகக் கூறி, 10 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக மல்லாகம் சோடா கம்பனி வீதியை சேர்ந்த பெண்ணொருவர், காங்கேசன்துறை விசேட மோசடி குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (22) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் கூறினர்.

காணி வாங்கித்தருவதாகக்கூறிய அதேயிடத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர், பெண்ணிடம் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் பணத்தை வாங்கியுள்ளார். காணி கொள்வனவு செய்யப்படாத நிலையில், தனது பணத்தை பெண் திரும்ப கேட்டவேளை, பணம் வாங்கிய வயோதிபர் பணத்தை தருவதாக தருவதாக கூறி ஏமாற்றிவந்துள்ளார்.

இதனையடுத்து, வயோதிபர் மீது பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .