Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஐவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வியாழக்கிழமை (23) தீர்ப்பளித்தார்.
மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில், ஏழாலை, மயிலங்காடு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஜவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு, வியாழக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
14 Jul 2025
14 Jul 2025