Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 மே 05 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வாளால் வெட்டி 13 வயது மகளை காயப்படுத்திய கீரிமலை சேந்தாங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை (05) உத்தரவிட்டார்.
மதுபோதையில் திங்கட்கிழமை (04) வீட்டுக்குச் சென்ற தந்தை மகளை வாளால் வெட்டிக் காயப்படுத்தினார்.
இதில், கே.அக்ஷா (வயது 13) என்ற சிறுமி படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதேவேளை, தனது 12 வயது மகளை தாக்கிய தந்தைக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த சிறுவர் நீதிமன்ற நீதவான், தந்தையை கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தார்.
கொடிகாமம், மிருசுவில் பகுதியை சேர்ந்த இந்நபர், கடந்த ஏப்ரல் மாதம் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது மகளை தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தந்தை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இனிவருங்காலத்தில் இவ்வாறு நடந்துகொள்ளமாட்டேன் என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
41 minute ago
46 minute ago