2025 ஜூலை 09, புதன்கிழமை

"யாழில் மாத்தையா குழு இல்லை"

Menaka Mookandi   / 2015 மே 06 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வாள்வெட்டுடன் பிடிக்கப்பட்ட குழுவுக்கு மாத்தையா குழுவென்று பெயர் இல்லையெனவும் ஊடகங்களும் சமூகமுமே இவ்வாறு கூறுகின்றன என்று வடமாகாணப் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித ஏ.ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் சிவில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் செவ்வாய்க்கிழமை (05) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது, 'யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்படும் குழுக்களுக்கு பெயர் வைக்கப்படுவதை நிறுத்த வேண்டும்' என்ற விடயத்தை வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் கூறினார்.

'வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவொன்றை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் கைது செய்யப்படும் போது, 'நான் வாள் வைத்திருக்கவில்லை மாத்தையா, நான் இல்லை மாத்தையா' என்று கூறியுள்ளனர். இதனை பொலிஸார் ஊடகங்களுக்கு 'மாத்தையா குழு' என்று கூறியுள்ளனர் என்று பிரகாஸ் கூறினார்.

இதற்கு பதிலளித்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், 'வாள்வெட்டுடன் பிடிக்கப்பட்ட குழுவுக்கு மாத்தையா குழுவென்று பெயர் இல்லை. ஊடகங்களும் சமூகமுமே இவ்வாறு கூறுகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .