Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2015 மே 06 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு விசுவமடு பொதுச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் புதுக்குடியிருப்புப் பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழுள்ள விசுவமடு பொதுச்சந்தை இன்றுவரை நிரந்தரக் கட்டடம் எவையுமின்றி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வருகின்றது.
பொதுச்சந்தையில் உள்ள வியாபாரிகள், தாங்கள் அமைத்த தற்காலிக கொட்டகைகளிலேயே இன்றுவரையும் தமது பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
மழை காற்று என்பனவற்றால் கொட்டகைகள் சேதமடைந்து காணப்படுவதுடன், வியாபாரத்துக்காக கொண்டுவரப்படும் பொருட்களை சந்தையில் வைத்து பாதுகாக்க முடியாத நிலை காணப்படுகின்றது. சந்தையைச் சுற்றி வேலிகள் இல்லாமையில், இரவில் கால்நடைகளின் உறைவிடமாக சந்தை காணப்படுகின்றது.
சந்தையின் சீரின்மை காரணமாக சந்தைக்கு வருகை தரும் மக்கள்; சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால், சந்தையை உரிய முறையில் அமைத்து அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago