Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 06 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.விஜயவாசகன்
கல்வியின் ஊடாகவே நாட்டின் சமூகப் பிறழ்வுகளை நீக்க முடியும். தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறைமை சமூக நலனை நோக்காகக் கொள்ளாது உத்தியோகத்தை நோக்காகக் கொண்டது என சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் தெரிவித்தார்.
தென்மராட்சியில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமையத்தினரால் வெள்ளிக்கிழமை (05) சாவகச்சேரி நகராட்சிமன்ற பொன்விழா மண்டபத்தில் கருத்தமர்வு நடாத்தப்பட்டது.
தென்மராட்சிப் பிரதேச பாடசாலைகளில் க.பொ.த.உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கும் பிரதேச கிராம சேவையாளர்களுக்கும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற பொது அமைப்புகளுக்கும் இக்கருத்தமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இங்கு கருத்துரை வழங்குகையிலேயே சட்ட வைத்திய அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.
அமைப்பின் தலைவர் க.அருந்தவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இருண்ட யுகத்தில் மயங்கிக் கிடந்த மாணவ சமுதாயத்தை இந்நிகழ்வு தட்டியெழுப்பி உள்ளது. யாழ் மாவட்டத்தில் முதன் முதலாக இவ் அமைப்பினை ஆரம்பித்த நற்சேவையை செய்யும் அமைப்பினர் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றார்.
இந்நிகழ்வில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி சமூகச் சீரழிவிற்குக் காரணமான போதைப்பொருளில் இருந்து விலகி இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தனர்.
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago