2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'இராணுவ பாவனையற்ற காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்'

Menaka Mookandi   / 2015 ஜூன் 07 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உயர் பாதுகாப்பு வலயமாக சுவீகரிக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளில் மக்களை மீளக்குடியர்த்தி, அவர்களின் மத வழிபாடுகளை தொடர்ந்து நடத்துவதற்கு இப்புதிய அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார்.

வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் ஆலய விசாக மடை திருவிழாவுக்கு, 25 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்போது பொதுமக்களுடன் பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பெருமளவான ஊர் மக்கள், வெளியூர்களில் இருந்து வருகை தந்து ஆலய பூஜை வழிபாடுகளில் ஆர்வமாக கலந்துகொண்டுள்ளனர். ஆனால் இவ்வாறான வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதுதான் இப்பூர்வீக மக்களுடைய எதிர்பார்ப்பாகும்' என்றார்.

'இவ்வாலயச் சூழலை உள்ளடக்கிய வசாவிளான் தெற்குப் பகுதி, தொடர்ந்து காடாகத்தான்  உள்ளது. அத்துடன் இப்பகுதி, இராணுவ பாவனைக்கு உட்படாத பிரதேசமாக உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்நிகழ்ச்சிஐத் தொடர்ந்து பூஜை வழிபாடுகளுடன் முடிவடையாமல் மக்களை மீளக்குடியர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது.

சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலுமே தமது வாழ்வாதரத்தினை கொண்டு நடத்துகின்றனர்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .