Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 08 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கிழக்கு, வீரான்தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவை சனிக்கிழமை (06) இரவு உடைத்து உள்நுழைந்து பணம் மற்றும் நகை உட்பட சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் கூறினர்.
வீட்டிலுள்ளவர்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவு வேளையில் வீடு திரும்பியபோதே திருட்டுப்போன விடயம் தெரியவந்தது.
வீட்டிலிருந்த 12 பவுண் நகை மற்றும் 23 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வீட்டுக்காரர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago