Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 08 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.விஜயவாசகன்
ஏ – 9 வீதியின் எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்துக்கு அருகில் சுமார் 200 மீற்றர் இடைவெளியில் தலையும் முண்டமும் வேறான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் கூறினர்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க இந்த சடலத்தின் கழுத்தில் வாகனத்தின் ரயர் சில்லு அடையாளம் காணப்படுவதால், வாகனம் மோதி இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் கூறினர்.
அத்துடன், தலையும் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த தலையும் முண்டமும் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சடலத்தை இதுவரையில் எவரும் அடையாளம் காட்டவில்லையெனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினர்.
22 minute ago
29 minute ago
34 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
34 minute ago
39 minute ago