2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Sudharshini   / 2015 ஜூன் 09 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கோண்டாவில் நந்தாவில் அம்மன் ஆலயம் முன்பாகவுள்ள ரயில் கடவையை நேற்று செவ்வாய்க்கிழமை (09) காலை துவிச்சக்கரவண்டியில் கடக்க முற்பட்டவரை ரயில் மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.

கோண்டாவிலைச் சேர்ந்த குமரன் ஜெயச்சந்திரன் (வயது 55) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்தார். இவர் செவிப்புலனற்றவர் என பொலிஸார் கூறினர்.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலே மோதியுள்ளது. இவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .