2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறப்புரிமை அட்டை வழங்க நடவடிக்கை

Administrator   / 2015 ஜூன் 09 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தால் சிறந்த வரி செலுத்துநர்களுக்கான சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு வீரசிங்கம், மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்.பிராந்திய பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி க.சர்வேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி கல்யாணி தகநாயக்கா கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ்.பிராந்தியத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 24 சிறந்த வரி செலுத்துநர்களுக்கான சிறப்புரிமைச் அட்டைகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .