Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 10 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏழாலை பூதரவாயர் கோவிலடியில், செவ்வாய்க்கிழமை (09) மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரிடமிருந்து அடித்துப் பறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், சில உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை (10) காலையில் ஏழாலை மகா வித்தியாலயத்துக்கு முன்பாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
சுன்னாகத்தில் இரும்புக் கடை வைத்திருக்கும் ஒருவர், இரவு வேலை முடிந்து தனது ஏழாலையிலுள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது, வீதியோரத்தில் இருவர் கைகளை காட்டி மறித்துள்ளனர்.
தன்னை பொலிஸார் மறிக்கின்றனர் என எண்ணிய அவர், மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, மறித்தவர்கள் அவரின் முகத்தில் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
இந்நிலையில் இன்று காலையில் மேற்படி மோட்டார் சைக்கிள், பாகங்கள் சில கழற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago